வேலூர் தொகுதி தேர்தல் வேண்டுமென்றே நிறுத்தம்- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு!

செய்திகள்
Updated Apr 19, 2019 | 11:37 IST | Times Now

வேலூர் தொகுதியில், வருமான வரித்துறையை பயன்படுத்தி வேண்டுமென்றே தேர்தலை மத்திய- மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில் தேர்தல் வேண்டுமென்றே நிறுத்தம்
முக ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து பெருமளவு பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அத்தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின்,  தேர்தல் ஆணையத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

வேலூர் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில், மத்திய- மாநில அரசுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வெறும் போலியானது எனத் தெரிவித்த அவர், வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்தே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

துரை முருகனின் வீடு மற்றும் கல்வி நிலைய வளாகம் மற்றும் சில இடங்களில் முதலில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்பட வில்லை எனத் தெரிவித்தனர். இரண்டு தினங்களுக்குப் பின்னர், அவர்களுக்கு சந்தமந்தமில்லாத இடத்தில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வேண்டுமென்றே தேர்தலை நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலேயே வருமான வரித்துறையை பயன்படுத்தி, மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார். 

NEXT STORY
வேலூர் தொகுதி தேர்தல் வேண்டுமென்றே நிறுத்தம்- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு! Description: வேலூர் தொகுதியில், வருமான வரித்துறையை பயன்படுத்தி வேண்டுமென்றே தேர்தலை மத்திய- மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Loading...
Loading...
Loading...