சூரத் பயிற்சி மையத்தில் பயங்கர தீ: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

செய்திகள்
Updated May 25, 2019 | 13:10 IST | Times Now

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

fire broke out at a shopping complex in Surat
fire broke out at a shopping complex in Surat  |  Photo Credit: ANI

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் செயல்பட்டு வந்த பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. இந்த வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டருக்கு  தீ மளமளவென பரவியது. இதில், சம்பவ இடத்திலேயே 15 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு படையினரும் தீவிரமாக போராடி வருகி்ன்றனர். மேலும் , உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

 Massive fire broke out at a shopping complex in Surat

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். மேலும், தீ விபத்தில் பலியாகிய குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

 

 

 

 

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
சூரத் பயிற்சி மையத்தில் பயங்கர தீ: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு! Description: சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...