காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் கன்னத்தில் ’பளார்’!

செய்திகள்
Updated Apr 19, 2019 | 12:59 IST | Times Now

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ஹர்திக் படேல் கன்னத்தில் மர்ம நபர் அறை விடுத்தது வைரலாகி வருகிறது.

 ஹர்திக் படேல் கன்னத்தில் ’பளார்
ஹர்திக் படேல்   |  Photo Credit: ANI

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஹர்திக் படேல் கன்னத்தில், ஒருவர் பளார் என அறைந்தது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அம்மாநிலத்தின் சுரேந்தர்நகரில் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருந்தபோது, இச்சம்பவம் நடைபெற்றது. 

ஹர்திக் படேல் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மேடைக்குச் சென்ற மர்ம நபர், படேலின் வலது கன்னத்தில் திடீரென அறைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மேடையின்மீது ஏறி, மர்ம நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஹர்திக் படேல் ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், விவசாயி ஒருவரின் நிலத்தில், அந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த நிலத்திற்கு சொந்தமான விவசாயி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஹர்திக் படேல், சாலை மார்க்கமாக கூட்டத்திற்குச் சென்றார்.இந்த நிகழ்வு நடைபெற்ற மறுநாள் ஹர்திக் படேல் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. 

படேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக குஜராத் மாநிலத்தில் போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசாரகராக ஹர்திக் படேல் திகழ்ந்து வருகிறார். 

ஹர்திக் படேல் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு முதலில் அனுமதி அளித்த விவசாயியான வினய் படேல், ஹர்திக் படேல் மீது ஏற்பட்ட அதிருப்தியால், முடிவை திரும்பப் பெற்றதாக தெரிவித்தார். படேல் இன மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்மீது ஹர்திக் படேல் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

NEXT STORY
காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் கன்னத்தில் ’பளார்’! Description: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ஹர்திக் படேல் கன்னத்தில் மர்ம நபர் அறை விடுத்தது வைரலாகி வருகிறது.
Loading...
Loading...
Loading...