ரமலான் நோன்பை கைவிட்டு ரத்தம் கொடுத்து உயிர் காத்த இளைஞர்!

செய்திகள்
Updated May 11, 2019 | 15:20 IST | Times Now

பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க முடியாது என்று பானுல்லாவின் சமூக சேவகர் நண்பரான தபாஷ் தெரிவித்துள்ளார்.

india, இந்தியா
ரத்த தானம்  |  Photo Credit: Getty Images

கவுகாத்தி: அசாமில் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவர் ரமலான் நோன்பை பாதியில் கைவிட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அசாம், கவுகாத்தியை பூர்விகமாக கொண்டவர் பனுல்லா அகமது. 26 வயதான இந்த இளைஞர் தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணியில் உள்ளார். 

முஸ்லிமான அவர் ரமலான் நோன்பில் ஈடுபட்டுருந்தார். இந்நிலையில் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜன் என்கிற நோயாளிக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டுள்ளது. இந்த தகவல் பானுல்லாவை வந்தடைந்துள்ளது.

ஆனால், பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க முடியாது என்று பானுல்லாவின் சமூக சேவகர் நண்பரான தபாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், நோயாளியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த பானுல்லா, ஒரு யூனிட் ரத்தம் அளித்துள்ளார்.  இந்த நிகழ்வை நோயாளி ராஜனின் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். 

NEXT STORY
ரமலான் நோன்பை கைவிட்டு ரத்தம் கொடுத்து உயிர் காத்த இளைஞர்! Description: பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க முடியாது என்று பானுல்லாவின் சமூக சேவகர் நண்பரான தபாஷ் தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles