100 முறை தோப்பு கரணம்... பிரதமர் மோடிக்கு சவால் விட்ட மமதா!

செய்திகள்
Updated May 09, 2019 | 19:08 IST | Times Now

பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

 Mamata Banerjee and pm Narendra modi, மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி
மமதா பானர்ஜி,  |  Photo Credit: Twitter

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியாவுடன் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறிய மோடி, அதை நிரூபிக்கவில்லை என்றால் 100 முறை தோப்பு கரணம் போட தயாரா என மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

மேற்கு வங்க மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதாவுக்கும் இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரு தலைவர்களும் இடையேயான வார்த்தை மோதலில் அனல் பறக்கிறது. மமதாவின் விமர்சனங்களுக்கு மோடியும் பதிலடி கொடுத்து வருகிறார். அதேபோல் மமதாவும் தனது பிரசார கூட்டங்களில் மோடியை சாடுவதற்கு தவறுவதில்லை.

மேற்கு வங்க மாநிலம், பங்குராவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,  மேற்கு வங்கத்தில் முறைகேடாக நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இதை வைத்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் சம்பாதித்து வருகின்றனா் எனக் கூறினார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களும் நிலக்கரி மாஃபியா கும்பலை சோ்ந்தவர்கள் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள மமதா, பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன். நிலக்கரி மாஃபியாவுடன் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை மோடி கூறியுள்ளார். மாஃபியா கும்பலுடன் உள்ளதை நிரூபித்தால் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 42 வேட்பாளர்களையும் வாபஸ் பெற தயார் என சவால் விட்டுள்ளார். ஆனால், நிரூபிக்கவில்லை என்றால் மோடி பொதுமக்கள் முன்பு காதில் கை வைத்து 100 முறை தோப்பு கரணம் போட தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

NEXT STORY
100 முறை தோப்பு கரணம்... பிரதமர் மோடிக்கு சவால் விட்ட மமதா! Description: பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles