"டிக்டாக்" தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

செய்திகள்
Updated Apr 22, 2019 | 13:19 IST | Times Now

சீன நிறுவனமான டிக்டாக் செயலியை இந்தியாவில் 5 மாதங்களுக்கு முன்பு 50 மில்லியன் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது 120 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.

tiktok, டிக்டாக்
"டிக்டாக்" தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் 

டெல்லி: டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல மொபைல் செயலியான "டிக்டாக்" கால் கலாசார சீரழிவு, ஆபாச எண்ணம், தற்கொலை, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை ஊக்குவிக்கப்படுவதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என மதுரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும், அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிபரப்பவும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து மத்திய அரசும் கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தது. இதனை எதிர்த்து சீன நிறுவனமான டிக்டாக் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் டிக் டாக் செயலிக்கு தடைவிதித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி டிக்டாக் செயலிக்கான தடையை இடைக்காலமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்து வரும் 24-ம் தேதி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. அன்றைய தினம் டிக் டாக் செயலி குறித்து எந்த முடிவும் எடுக்க தவறும் பட்சத்தில் தடை தானாக தளர்ந்ததாக கருதப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனமான டிக் டாக் செயலியை இந்தியாவில் 5 மாதங்களுக்கு முன்பு 50 மில்லியன் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது 120 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது டிக்டாக். விளையாட்டு தொடர்பு இல்லாத ஒரு மொபைல் ஆப் அதிக அளவு டவுண்லோடு செய்யப்பட்டது இதுதான். 

NEXT STORY
"டிக்டாக்" தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் Description: சீன நிறுவனமான டிக்டாக் செயலியை இந்தியாவில் 5 மாதங்களுக்கு முன்பு 50 மில்லியன் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது 120 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.
Loading...
Loading...
Loading...