இந்திய இறையாண்மைக்கு எதிராகலாம் - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தது இந்தியா

செய்திகள்
Updated May 14, 2019 | 11:43 IST | Times Now

இந்திய இறையாண்மைக்கு எதிராக இதன் செயல்கள் மாறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் ஊபா சட்டத்தின்கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைக் புலிகளின் தடை நீட்டிக்கப்பட்டளது.

ltte ban extended for next 5 years by indian government
ltte ban extended for next 5 years  |  Photo Credit: Times Now

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

ராஜிவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப்படையால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இலங்கையில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் ஏற்பட்டப்போரில் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை ராணுவம். மேலும் அதன்பிறகு புலிகள் இயக்கமும் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறியது.

இருப்பினும் இன்னும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருப்பதாக மத்திய அரசு நம்புகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவை பெருக்க தமிழகத்தில் முயற்சிகள் நடக்கின்றன. தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக இதன் செயல்கள் மாறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் ஊபா சட்டத்தின்கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைக் புலிகளின் தடை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

NEXT STORY
இந்திய இறையாண்மைக்கு எதிராகலாம் - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தது இந்தியா Description: இந்திய இறையாண்மைக்கு எதிராக இதன் செயல்கள் மாறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் ஊபா சட்டத்தின்கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைக் புலிகளின் தடை நீட்டிக்கப்பட்டளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola