வரும் 30-ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி !

செய்திகள்
Updated May 25, 2019 | 16:40 IST | Times Now

வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை பிரமாணடமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Narendra Modi to take oath as prime minister for a second term on May 30
Narendra Modi to take oath as prime minister for a second term on May 30  |  Photo Credit: PTI

டெல்லி:  மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே-19 வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி அபார வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் 6,74,664 லட்சம் வாக்குகள் மோடிக்கு கிடைத்துள்ளன. 

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரமதர் மோடி உரிமை கோருவார். இதனைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். 

கடந்த 2014-ம் ஆண்டு முதன் முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதேபோல், இந்த முறையும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, குடியரசுத் தலைவரை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 542 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பிக்களின் பட்டியலை வழங்கினார். 
 

NEXT STORY
வரும் 30-ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி ! Description: வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை பிரமாணடமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
Loading...
Loading...