மக்களவைத் தேர்தல் 2019: 111-வயதில் ஜனநாயக கடமையாற்றிய பச்சன் சிங்

செய்திகள்
Updated May 12, 2019 | 13:56 IST | Times Now

டெல்லி சந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் 111 வயதான பச்சன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்

111-year old Bachan Singh,  111 வயதான பச்சன் சிங்
111-வயதில் ஜனநாயக கடமையாற்றி பச்சன் சிங்  |  Photo Credit: ANI

டெல்லி: டெல்லியில் மிக வயதான வாக்காளரான பச்சன் சிங் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அவருக்கு வயது 111.

டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஹரியானாவின் குருகிராமில் உள்ள பள்ளியொன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீர் பழைய ராஜீந்தர் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வாக்காளர்கள் காலையிலே வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 

டெல்லியில் மிக வயது முதிர்ந்த வாக்காளரான பச்சன் சிங் இன்று தனது வாக்கினை செலுத்தினார்.  அவருக்கு வயது 111. இவர் டெல்லி சந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். கடந்த 1951-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் எல்லா தேர்தலிலும் பச்சன் சிங் தவறாமல் வாக்களித்து வருகிறார். இந்த முறை தேர்தல் அதிகாரிகளுடன் காரில் வந்து இறங்கிய அவர், சக்கர நாற்காலியில் வாக்கு மையத்திற்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 

NEXT STORY
மக்களவைத் தேர்தல் 2019: 111-வயதில் ஜனநாயக கடமையாற்றிய பச்சன் சிங் Description: டெல்லி சந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் 111 வயதான பச்சன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles