Election results 2019 LIVE UPDATES: மத்தியில் ‘மீண்டும் மோடி’ - ஆட்சியைத் தக்க வைக்கும் பாஜக?!

செய்திகள்
Updated May 23, 2019 | 23:46 IST | Times Now

Result of elections 2019: இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய மக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு 11 மணியைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Election results 2019 LIVE UPDATES:
Election results 2019 LIVE UPDATES  |  Photo Credit: ANI

17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 23  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 542 இடங்களில் 272 இடங்களை வெற்றி பெற்றால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். இந்நிலையில் ஆளும் பாஜக அரசு, 340க்கும் மேற்பட்ட இடங்களை தக்க வைத்து பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கிறது. 

11.11 pm: தற்போதைய செய்திகளின்படி பாஜக 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 71 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று காங்கிரஸ் 39 இடங்களில் வென்றுள்ளது. 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. (தனிப்பெரும்பான்மை மட்டும்)

11.05 pm: உங்களது நல்வாழ்த்துகளுக்கு நன்றி; அமைதி, மேம்பாட்டுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளேன் - மக்களவை தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதே போன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மோடிக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

11.00 pm: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைத் தொடர்ந்து விவிபேட் வாக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின்படி மேலும் 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகவே இறுதி முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

7.00 pm: வெற்றி உறுதியாவதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷாவுடன், பாஜக தலைமை அலுவலகம் வந்தடைந்த பிரதமர் மோடி, மக்களுக்கு தனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக உரையாற்றினார்.

5.30 pm: தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கையின்படி... 

  1. மகாராஸ்ட்ராவில் பாஜக - 41, காங்கிரஸ் - 6, மற்றவை - 1
  2. மத்தியபிரதேசத்தில் பாஜக-28, காங்கிரஸ் - 1
  3. கேரளாவில் பாஜக - 0, காங்கிரஸ் - 19
  4. கர்நாடகாவில் பாஜக - 25, காங்கிரஸ் - 3
  5. குஜராத்தில் பாஜக - 26, காங்கிரஸ் - 0
  6. தமிழ்நாட்டில் பாஜக - 1, காங்கிரஸ் - 38
  7. பீஹாரில் பாஜக - 37, காங்கிரஸ் - 3
  8. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் - 25, தெலுங்கு தேசம் - 0, பாஜக - 0, காங்கிரஸ் - 0
  9. தெலங்கானாவில் டிஆரெஸ் - 9,  பாஜக - 4, காங்கிரஸ் - 4
  10. புது தில்லியில் பாஜக - 7, காங்கிரஸ் - 0, 
  11. சத்தீஸ்கர் பாஜக - 9, காங்கிரஸ் - 2
  12. மேற்கு வங்கம் - திரிணாமுல் - 24, காங்கிரஸ் - 1, பாஜக - 17
  13. உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி - 20, பாஜக - 59, காங்கிரஸ் - 1, 
  14. ராஜஸ்தானில் பாஜக - 25, காங்கிரஸ் 0
  15. பஞ்சாப்பில் பாஜக - 4, காங்கிரஸ் - 8, ஆம் ஆத்மி - 1

4.30 pm: கேரளா வயநாட்டில் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி

4.00 pm: ஒடிசாவின் பிஜூ ஜனதா தளக் கட்சியின் தலைவர் நவின் பட்நாயக், 2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசா மாநில முதல்வராக இருந்துவருகிறார். கடந்த நான்கு தேர்தலிலும் வெற்றிபெற்று முதல்வராக இருந்தவர். மொத்தம் 147 தொகுதிகளில் 102 தொகுதிகளில் இந்தக்கட்சி முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த முறையும் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

3.40 pm: 

  1. மோடி வாரணாசியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 
  2. திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி
  3. நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

3.30 pm: 

  • தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
  • சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை
  • கோவையில் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை
  • தென்சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
  • ஸ்ரீநகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஃபரூக் அப்துல்லா முன்னிலையில் உள்ளார். 
  • கரூரில் திமுக கூட்டனி வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
  • தமிழ்நாட்டில் தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் முன்னிலையில் உள்ளார்.

3.00 pm: வாரணாசியில் மோடி வெற்றிபெற்றது உறுதி செய்யப்பட்டது. பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களுக்கு அதிகமாகவே வெற்றிபெற்றுள்ளதால், வரும் 26-ம் தேதி அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். 

2.20 pm: ட்விட்டரில் பல தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் மோடி, நீங்கள் சாதித்து வீட்டீர்கள் என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

 

 

2.00 pm: ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் 175 இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 25 தோகுதிகள் மட்டுமே பெற்று பெரும்பான்மையை இழந்துள்ளது. அதனால் இன்று மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலகுகிறார். 149 இடங்களில் முன்னிலை வகித்து தற்போதே வெற்றியை உறுதி செய்துள்ளது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி. அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுவரை வெற்றியை உறுதி செய்த வேட்பாளர்கள் இவர்கள்தான்!

1.00 pm: தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கையின்படி... 

  1. மகாராஸ்ட்ராவில் பாஜக - 40, காங்கிரஸ் - 6
  2. மத்தியபிரதேசத்தில் பாஜக-27, காங்கிரஸ் - 2
  3. கேரளாவில் பாஜக - 0, காங்கிரஸ் - 19
  4. கர்நாடகாவில் பாஜக - 23, காங்கிரஸ் - 5
  5. குஜராத்தில் பாஜக - 26, காங்கிரஸ் - 0
  6. தமிழ்நாட்டில் பாஜக - 2, காங்கிரஸ் - 36
  7. பீஹாரில் பாஜக - 36, காங்கிரஸ் - 4
  8. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் - 23, தெலுங்கு தேசம் - 2, பாஜக - 0, காங்கிரஸ் - 0
  9. தெலங்கானாவில் டிஆரெஸ் - 8,  பாஜக - 6, காங்கிரஸ் - 3
  10. புது தில்லியில் பாஜக - 7, காங்கிரஸ் - 0, 
  11. உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி - 22, பாஜக - 57, காங்கிரஸ் - 1, 
  12. ராஜஸ்தானில் பாஜக - 24, காங்கிரஸ் 1
  13. பஞ்சாப்பில் பாஜக - 2, காங்கிரஸ் - 10, ஆம் ஆத்மி - 1

12.30 am: கிட்டத்தட்ட பா.ஜ.வின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் மோடி பாஜக உறுப்பினர்களை கட்சி அலுவலகத்தில் இன்று சந்திக்கவிருக்கிறார். நாளை மாலை அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. 

11.45 am: தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கையின்படி... 

  1. மகாராஸ்ட்ராவில் பாஜக - 44, காங்கிரஸ் - 3
  2. மத்தியபிரதேசத்தில் பாஜக-28, காங்கிரஸ் - 1
  3. கேரளாவில் பாஜக - 0, காங்கிரஸ் - 19
  4. கர்நாடகாவில் பாஜக - 24, காங்கிரஸ் - 4
  5. குஜராத்தில் பாஜக - 26, காங்கிரஸ் - 0
  6. தமிழ்நாட்டில் பாஜக - 3, காங்கிரஸ் - 35
  7. பீஹாரில் பாஜக - 38, காங்கிரஸ் - 2
  8. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் - 24, தெலுங்கு தேசம் - 1, பாஜக - 0, காங்கிரஸ் - 0
  9. தெலங்கானாவில் டிஆரெஸ் - 8,  பாஜக - 6, காங்கிரஸ் - 3
  10. புது தில்லியில் பாஜக - 7, காங்கிரஸ் - 0, 
  11. உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் சமாஜ்வாதி கூட்டணி - 25, பாஜக - 53, காங்கிரஸ் - 2, 
  12. ராஜஸ்தானில் பாஜக - 24, காங்கிரஸ் 1
  13. பஞ்சாப்பில் பாஜக - 3, காங்கிரஸ் - 9, ஆம் ஆத்மி - 1

11.30 am: மோடியின் தாயார் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்.

 

 

 

11.15 am: ராஜஸ்தானில் பா.ஜ.க 24 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை. 

11.00 am: அமேதியில் ராகுலை விட ஸ்மிரிதி இராணி 4300 வாக்குகள் முன்னிலை, அதே சமயம் ராகுல் காந்தி கேரளா வயநாட்டில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை, அதேபோல வாரணாசியில் மோடி ஒரு லட்சத்து ஏழாயிரம் வாக்குகள் முன்னிலை,

 

 

10.40 am: கன்னியாகுமரியில் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு

10.30 am: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை

 

 

 

 

 

 

 

10.00 am: அமேதியில் ராகுல் காந்தி முன்னிலை

9.45 am: பெரம்பலூரில்ம்திமுக வேட்பாளர் பாரி வேந்தர் முன்னிலை

9.40 am: பெரம்பூரில் அமமுக கட்சியை விட மக்கள் நீதி மய்யம் முன்னிலையில் இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக முன்னிலையில் இருக்கிறது.

9.25 am: திமுக 34 இடங்களில் முன்னிலை, அதிமுக இரண்டு இடங்களில் முன்னிலை

9.05 am: சிதம்பரத்தில் தொல் திருமாவளவன் பின்னடைவு

9.00 am: புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை, தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

8.50 am: திமுக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை, அதிமுக கூட்டணி கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முன்னிலை

8.43: பெரம்பலூர், தஞ்சை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, அரக்கோணம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், நீலகிரி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை

8.35 am: கேரளா வயநாடில் ராகுல் காந்தி முன்னிலை, தமிழகத்தில் திமுக கூட்டணி எட்டு இடங்களில் முன்னிலை

8.30 am: இன்று திமுக தலைவர் கலைஞர் அவர்களில் நினைவிடத்தில் நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

8.25 am: திருவனந்தபுரத்தில் பா.ஜ.க முன்னிலை, வாரணாசியில் மோடி முன்னிலை, காந்திநகரில் அமித்ஷா முன்னிலை

8.20 am: காஞ்சிபுரம், வட சென்னையில் திமுக முன்னிலை, தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை

8.15 am: அமேதியில் ராகுல் காந்தி முன்னிலை

8.10 am: ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் பா.ஜ.க முன்னிலை

8.00 am: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மக்களவையில் பெரும்பாண்மை பெற 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்

 

 

7.00 am: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 67.1 % பேர் வாக்களித்துள்ளனர். இதுதான் இதுவரை நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடந்த தேர்தல்.

6.30 am: நாடுமுழுவதும் இந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 8,000 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 

NEXT STORY
Election results 2019 LIVE UPDATES: மத்தியில் ‘மீண்டும் மோடி’ - ஆட்சியைத் தக்க வைக்கும் பாஜக?! Description: Result of elections 2019: இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய மக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு 11 மணியைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Loading...
Loading...
Loading...