வாரணாசியில் மீண்டும் ‘மோடி அலை’ - அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைக்கும் பிரதமர் மோடி!

செய்திகள்
Updated May 23, 2019 | 23:23 IST | Times Now

கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் மாநிலம் வதோரா மற்றும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 

election 2019, தேர்தல் 2019
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: Twitter

டெல்லி: மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் பிரதமர் மோடி. 

கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் மாநிலம் வதோரா மற்றும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 

வதோரா மற்றும் வாரணாசி இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். அதிலும் வாரணாசியில் அவர் 3,70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வியை சந்தித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி தொகுதியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார். இந்த முறை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பார் என்று சூளுரைத்திருந்தது பாஜக.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகான வாக்கு எண்ணிக்கையில் 6,74,664 வாக்குகளைப் பெற்று வாரணாசியில் வெற்றிமுகம் பெருகிறார் பிரதமர் மோடி. அவர் கிட்டதட்ட 479,505 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஷாலினி யாதவை முந்தியுள்ளார். மோடிக்கும், ஷாலினி யாதவிற்கும் இடையே 63.6%-18.4% என்கிற மிகப் பெரிய வாக்கு சதவீத வேறுபாடு நிலவுகிறது. பிரதமர் மோடி 6,74,664 வாக்குகளையும், ஷாலினி யாதவ் 1,95,159 வாக்குகளையும் பெற்றூள்ளனர். 

இதனால் மற்ற எல்லா கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வாரணாசியைத் தக்க வைத்துக் கொள்வது உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
வாரணாசியில் மீண்டும் ‘மோடி அலை’ - அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைக்கும் பிரதமர் மோடி! Description: கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் மாநிலம் வதோரா மற்றும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!