300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை!

செய்திகள்
Updated May 23, 2019 | 11:08 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 300 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது

300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை  |  Photo Credit: Twitter

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா  கூட்டணி 300 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அமைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றன.  80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 48 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிராவில் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனா முன்னிலையில் உள்ளது. இதேபோல், 40 தொகுதிகளைக் கொண்ட பீஹாரில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கூட்டணி 35 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ளது. 

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 25 தொகுதிகளிலும், குஜராத்தில் 24 இடங்களிலும் பாரதிய ஜனதா முன்னணியில் உள்ளது.

கர்நாடகாவில் பாரதிய ஜனதா 15 தொகுதிகளிலும், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 13 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், 300 க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது.
 

NEXT STORY
300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை! Description: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 300 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles