ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் முன்னிலை: முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

செய்திகள்
Updated May 23, 2019 | 14:12 IST | Times Now

ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் முன்னிலை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் முன்னிலை  |  Photo Credit: BCCL

ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. 25 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் அனைத்து தொகுதிகளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இதுகுறித்து டைம்ஸ் நவ்க்கு பேட்டியில், கடவுளும், மக்களும் தங்களது கட்சிக்கு வாழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள ஜெகன் கட்சி, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், 150 இல் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 25 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. 

வெற்றிகுறித்து டைம்ஸ் நவ்க்கு பேட்டியளித்த ஜெகன் மோகன் ரெட்டி ‘ மிகப்பெரிய அளிவில் எங்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என எப்போதுமே எதிர்பார்த்தோம்’ எனத் தெரிவித்தார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு  தேர்தலில் 42 தொகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 11 தொகுதிகளிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

NEXT STORY
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் முன்னிலை: முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி! Description: ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.
Loading...
Loading...
Loading...