டெல்லி, குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை!

செய்திகள்
Updated May 23, 2019 | 13:05 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி டெல்லி, குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் பாஜக அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது

டெல்லி, குஜராத், ஹரியானாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை
டெல்லி, குஜராத், ஹரியானாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை  |  Photo Credit: ANI

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி டெல்லி, குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் பாஜக அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.மக்களவைத் தேர்தலில் டெல்லி, குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் தற்போது பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதேபோல், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களில் 24 இல் பாரதிய ஜனதாவும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாரதிய ஜனதா 28 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. 

பீஹாரில் உள்ள 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி கூட்டணி 38 இடங்களிலும், காங்கிரஸ்- ராஷ்டீரிய ஜனதாதளம் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மஹாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 43 இடங்களில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், மற்ற கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாரதிய ஜனதா 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 

NEXT STORY
டெல்லி, குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை! Description: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி டெல்லி, குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் பாஜக அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது
Loading...
Loading...
Loading...