ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக வீரர்கள் தேர்வு தொடக்கம்!

செய்திகள்
Updated Sep 06, 2019 | 18:36 IST | Times Now

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக வீரர்கள் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

ககன்யான் வீரர்கள் தேர்வு தொடக்கம், Gaganyaan Astronaut selection started
ககன்யான் வீரர்கள் தேர்வு தொடக்கம்  |  Photo Credit: Twitter

பெங்களூரு: இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக வீரர்கள் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.   

சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நாளை நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் தரை இறங்கவுள்ளதை எதிர்ப்பார்த்து முழு தேசமும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் 2022-இல்  இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக வீரர்களின் முதற்கட்ட தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசினில் இஸ்ரோ மற்றும் இந்திய விமான படை சார்பில் வீரர்களுக்கு உடல் பரிசோதனை, மருத்துவ பரிசோதனை, மனோதிடம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

 

 

 

 

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதென இஸ்ரோவுடன் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோமாஸ் (Roscosmos) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு பயிற்சிக்காக அனுப்படப்படவுள்ளனர். அங்கு மேலும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு இறுதியாக 3 பேர் மட்டுமே ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்படப்படவுள்ளனர்.

இந்தியாவில் இருந்து தற்போது வரை விண்வெளிக்கு சென்றுள்ள ஒரே வீரர் ராகேஷ் ஷர்மா தான். ஆனால் ரஷ்யாவின் சார்பாக அனுப்பப்பட்ட இன்டெர்காஸ்மோஸ் திட்டமான சோயுஸ்  T-11-இல் பயணித்தவர். எனவே இந்தியாவின் சார்பாக இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டம் ககன்யான் தான். இந்த திட்டத்திற்க்காக பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.             

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...