ஆட்டோ மொபைல் துறையில் சரிவு; அடுத்தடுத்து தற்காலிக முடக்கத்தில் நிறுவனங்கள்!

செய்திகள்
Updated Aug 16, 2019 | 20:12 IST | Times Now

இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

தற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், Automobile Industries in Temporary Shutdown
தற்காலிக முடக்கத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்  |  Photo Credit: Indiatimes

இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தற்போது பல முன்னணி நிறுவனங்கள் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் குறைந்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட தகவல்களில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி சென்ற ஆண்டை விட வாகன விற்பனை 31 சதவீதமாக குறைந்துள்ளது. வாகன நிறுவனங்கள் பல தள்ளுபடிகள் தந்த போதும் விற்பனையை அதிகரிக்க முடியவில்லை. பல புது மாடல் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்திய போதும் விற்பனை அதிகரித்தப்பாடு இல்லை. இதனால் பல முன்னணி வாகன நிறுவனங்கள் கூட சரிவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை ஈடு கட்ட நிறுவனங்கள் தற்போது தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்பொரேஷன் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவித்ததுள்ளது. இதனை தொடர்ந்து டி.வி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுந்தரம்-கிளேடான் லிமிடெட் மற்றும் லூகாஸ் டி.வி.எஸ் 2 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம் இந்த துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவையே அவர்கள் காரணமாக கூறியுள்ளனர்.

Sundaram-Clayton Temporary Production Shutdown

Lucas TVS Shutdown

சில நாட்களுக்கு முன் போஸ்ச் நிறுவனம் கூட தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிராவில் தங்களுக்கு சொந்தமான தொழிற்சாலையில் 13 நாட்கள் உற்பத்தியை நிறுத்திவைத்திருந்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோ மொபைல் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.முன்னணி தயாரிப்பு நிறுவனங்களே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ள போது, அவர்களை சார்ந்து இருக்கும் சிறு நிறுவனங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது இந்த நெருக்கடியை சீர் செய்ய ஆட்டோ மொபைல் துறையில் உள்ள நிறுவனங்கள் கலந்து ஆலோசித்து வருகிறது.              

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...