ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி

செய்திகள்
Updated Aug 20, 2019 | 10:04 IST | Times Now

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Rajiv Gandhi
ராஜீவ் காந்தி பிறந்த நாள்  |  Photo Credit: PTI

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை, ராஜீவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் குலான் நபி ஆசாத், புபேந்தர் சிங், அகமது படேல் ஆகியோரும் அவரது சமாதிக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. தனது தந்தை குறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘’ எனது தந்தையின் 75வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப் படுகிறது. இதன் காரணமாக இந்த வாரம் முழுவதும் அவர் படைத்த சாதனைகளை பற்றிக் கூறி அவரை கவுரவப்படுத்த இருக்கிறேன். அதன்படி முதலைல் தகவல் தொடர்பு புரட்சி குறித்து கூறுவதாக ஒரு வீடியோ பதிவை பதிவிட்டுள்ளார். 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...