குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி: சுஷ்மா ஸ்வராஜ் கருத்து!

செய்திகள்
Updated Jul 17, 2019 | 20:00 IST | Times Now

குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி; சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் வழக்கின் தீர்ப்பு மாபெரும் வெற்றி: சுஷ்மா கருத்து
குல்பூஷன் வழக்கின் தீர்ப்பு மாபெரும் வெற்றி: சுஷ்மா கருத்து  |  Photo Credit: PTI

புதுடெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வழக்கின் தீர்ப்பு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி; சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், ‘இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் ஜாதவ் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 

இதேபோல், சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சரியான கருத்துக்களை எடுத்துவைத்த மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கும் நன்றி தெரிவித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷன் ஜாதவின் குடும்பத்திற்கு இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தால் முன்ளாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று தடைவிதித்தது.

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...