கேரள சிறைவாசிகள் அசத்தல்.. வெறும் ரூ.127-க்கு பிரியாணியோடு இத்தனை வகைகளா?

செய்திகள்
Updated Jul 12, 2019 | 12:16 IST | Times Now

கேரள மாநில சிறையில் உள்ள கைதிகள் தயார் செய்யும் பிரியாணிக்கு ஆன்லைனில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Biryani made by Kerala jail inmates
Biryani made by Kerala jail inmates  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: கேரள மாநில வையூர் மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பிரியாணி ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் வையூர் மத்திய சிறையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகள் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறை நிர்வாகத்தினர் அவர்களுக்கு சமையல் பயிற்சி அளித்தனர். இதையடுத்து கைதிகளே தங்களுக்கு தேவையான சப்பாத்திகளை தயார் செய்து வந்தனர். தங்களது தேவைக்கும் அதிகமான சப்பாத்திகள் செய்து அதனை விற்பனை செய்ய துவங்கினர். சிறைக் கைதிகளின் சப்பாத்திகளுக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து பேக்கரி வகைகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவற்றை சமைத்து விற்பனை செய்ய தொடங்கினர். இந்த பணியில் சுமார் 100 சிறைக் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறப்பு கவுண்டர்களை அமைத்து கொடுத்தது சிறை நிர்வாகம். இதனால் சிறையின் வருவாய் அதிகரித்தது. இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். 

இதையடுத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் பிரியாணி காம்போ பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த காம்போ பேக்கேஜ்ஜின் விலை ரூ.127 ஆகும். இந்த காம்போ பேக்கேஜில், 300 கிராம் பிரியாணி, ஒரு சிக்கன் செக் பீஸ், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் இதோடு ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. இவை வையூர் மத்திய சிறை பகுதிக்கு உட்பட்ட 6 கிலோ மீட்டர் தொலைவிற்குள் டெலிவரி செய்யப்படுகிறது. 

இவ்வளவு குறைந்த விலையில் பிரியாணியோடு இத்தனை வகைகள் வழங்கப்படுவது கேரள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்லைனிலும் ஆர்டர்கள் குவிந்து வருவதால் சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

NEXT STORY
கேரள சிறைவாசிகள் அசத்தல்.. வெறும் ரூ.127-க்கு பிரியாணியோடு இத்தனை வகைகளா? Description: கேரள மாநில சிறையில் உள்ள கைதிகள் தயார் செய்யும் பிரியாணிக்கு ஆன்லைனில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles