பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்- பினராயி விஜயன் புகழாரம்

செய்திகள்
Updated Sep 17, 2019 | 20:34 IST | Times Now

அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.

kerala CM Pinarayi Vijayan
கேரள முதல்வர் பினராயி விஜயன்  |  Photo Credit: Times Now

திருவனந்தபுரம்: பெரியார் புகழ் ஓங்குக என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளாா்.

பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர். சென்னை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியாரை நினைவு கூறும் வகையில், பலரும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் பெரியாரை நினைவுகூர்ந்துள்ளார். பெரியார் பிறந்தநாளையொட்டி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்! பெரியார் புகழ் ஓங்குக," என பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

NEXT STORY