கதுவா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு: குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை!

செய்திகள்
Updated Jun 10, 2019 | 17:22 IST | Times Now

கதுவா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கதுவா வழக்கில் குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை
கதுவா வழக்கில் குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை  |  Photo Credit: PTI

புதுடெல்லி: கதுவா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில், ஓராண்டு விசாரணைக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் 6 பேர் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குற்றச்சாட்டு ஆளான போலீசார் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு அளித்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தான் சிறுவன் என்பதால் சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சான்ஜி ராம், திலக் ராஜ், அரவிந்த் தத்தா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியாவும் இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். சான்ஜி ராமின் மகன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கதுவாவில் உள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கின் முதற்கட்ட விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமியை கோயிலில் 4 நாட்கள் அடைத்து வைத்த கும்பல், அந்த சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தது. சிறுமியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்தபோது, அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்திருப்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளுக்கு எதிரான உறுதியான ஆராரங்களும் சிக்கின.

இதனைத்தொடர்ந்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

NEXT STORY
கதுவா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு: குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை! Description: கதுவா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் குற்றவாளிகள்3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!