100வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது: சர்ச்சையைக் கிளப்பிய வைகோ

செய்திகள்
Updated Aug 13, 2019 | 11:33 IST | Times Now

மாநிலங்களவையில் காஷ்மீர் விவாதத்தின் போது தான் 30 சதவீதம் காங்கிரஸையும் 70 சதவீதம் பாஜகவையும் விமர்சித்ததாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

Vaiko, Member of the Rajya Sabha
மாநிலங்களவை உறுப்பினர் வைகோ  |  Photo Credit: Twitter

சென்னை: இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது காஷ்மீர் எனும் மாநிலம் இந்தியாவில் இருக்காது என்று பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மாநிலங்களவை உறுபினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வயிட வந்த வைகோ செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். மேலும், மாநிலங்களவையில் காஷ்மீர் விவாதத்தின் போது காங்கிரஸை அதிகமாகத் தாக்கி பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசிய வைகோ, தான் 30 சதவீதம் காங்கிரசை விமர்சித்ததாகவும் 70 சதவீதம் பாஜகவை விமர்சித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

புதை மணலில் காஷ்மீரை சிக்க வைத்து விட்டதாக பாஜக மீது வைகோ குற்றம்சாட்டினார். 100வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் காஷ்மீர் எனும் மாநிலம் இந்தியாவுடன் இருக்காது என்று அவர் காட்டமாக கூறினார். முன்னதாக, 2018 ஏப்ரல் மாதம் அன்றைய பிரதமராக நரேந்திர மோடி சென்னைக்கு வருகைத் தருவதை கண்டித்து நடைபெற்ற போரட்டத்தின் போது, 2047ஆம் ஆண்டு இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டின் பல்வேறு பகுதிகள் தனி நாடுகள் ஆகியிருக்கும் என்றும் அதில் தமிழகமும் ஒன்றாக இருக்கும் என்றும் வைகோ பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
100வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது: சர்ச்சையைக் கிளப்பிய வைகோ Description: மாநிலங்களவையில் காஷ்மீர் விவாதத்தின் போது தான் 30 சதவீதம் காங்கிரஸையும் 70 சதவீதம் பாஜகவையும் விமர்சித்ததாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...