விபரீதத்தில் முடிந்த டிக்டாக் சாகசம், இளைஞர் மரணம்

செய்திகள்
Updated Jun 24, 2019 | 13:52 IST | Times Now

டிக்டாக் செயலியில் சாகசம் செய்த இளைஞர் முதுகெலும்பு முறிந்ததால் மரணம்.

TikTok  Death
டிக்டாக் மரணம்  |  Photo Credit: Twitter

டிக்டாக் ஆப்பில் சாகசம் செய்த இளைஞருக்கு முதுகெலும்பு முறிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
 .
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி என்னும் இளைஞர் நடன கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கமாக செய்யும் சாகசத்தை நண்பர்கள் டிக்டாக்-யில் படம்பிடிக்கும் போது அந்த சாகசம் விபரீதத்தில் முடிந்தது.

பின்புறமாக பிளிப் செய்ய முயன்ற குமாரசாமி கால்களை தரையில் வைக்க தடுமாறியாதல், அவரது தலை நேரடியாக தரையில் மோதியது. இதனால் அவர் கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.  விபத்து நடந்து பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இவர் நேற்று உயிர் இழந்தார். 

tiktok

இவரது இந்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.தொடர்ந்து டிக்டாக் செயலியில் இது போன்ற பல விபரீதங்கள் நடந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் லைக்ஸ்காக இது போன்ற பல விபரீதங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இவரது மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.                
 

NEXT STORY
விபரீதத்தில் முடிந்த டிக்டாக் சாகசம், இளைஞர் மரணம் Description: டிக்டாக் செயலியில் சாகசம் செய்த இளைஞர் முதுகெலும்பு முறிந்ததால் மரணம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles