கர்நாடக சபாநாயகர் முடிவுக்கு எதிர்ப்பு: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

செய்திகள்
Updated Jul 10, 2019 | 12:11 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலதாமதம் செய்வதாக கூறி ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 Karnataka Rebel MLAs move to Supreme Court
Karnataka Rebel MLAs move to Supreme Court   |  Photo Credit: PTI

பெங்களூர்: கர்நாடகாவில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். ஆனால், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனிடையே நேற்று திடீரென மற்றொரு எம்எல்ஏ ரோஷன் பெய்க் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் மும்பை ஹோட்டலில் தங்கவில்லை.

இதையடுத்து மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் சிவக்குமார், மும்பை போலீசாரால் ஹோட்டலின் நுழைவு வாயிலில் இன்று தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக கூறி அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்றே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இருப்பினும் விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

NEXT STORY
கர்நாடக சபாநாயகர் முடிவுக்கு எதிர்ப்பு: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு Description: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலதாமதம் செய்வதாக கூறி ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola