அரசியலைத் தாண்டிய நண்பர்கள்: பாஜக எம்.எல்.ஏக்களுக்கு உணவளித்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா!

செய்திகள்
Updated Jul 19, 2019 | 12:22 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையில் தங்கி போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களுக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா இன்று காலை டிபன் அளித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏக்களுக்கு உணவளித்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா
பாஜக எம்.எல்.ஏக்களுக்கு உணவளித்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா  |  Photo Credit: ANI

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான விவாதம் 2வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்றிரவு சட்டப்பேரவையில் தங்கி போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களுக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் பரமேஸ்வரா இன்று காலை டிபன் அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக்குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் நேற்றிரவு கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சரான பரமேஸ்வரா சட்டப்பேரவைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாரதிய உறுப்பினர்களை சந்தித்தார். பின்னர், அவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பரமேஸ்வரா, பாரதிய ஜனதா உறுப்பினர்கள் விதான் சவுதாவில் நேற்றிரவு முதல் தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகளை செய்து தர வேண்டியது எங்களது கடமை எனத் தெரிவித்துள்ளார். அவர்களில் சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு அனைத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அனைவரும் நண்பர்கள். இதுதான் ஜனநாயகத்தின் அருமை எனத் தெரிவித்துள்ளார். 

பின்னர், பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்து பரமேஸ்வராவும் காலை உணவு சாப்பிட்டார்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...