கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புமா குமாரசாமி அரசு!

செய்திகள்
Updated Jul 17, 2019 | 22:35 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  |  Photo Credit: Times Now

கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்க விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அதேசமயம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வாக்களிக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,  சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கர்நாடாகவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தில் சாதமான தீர்ப்பு கிடைக்காத நிலையில், மும்பை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமால் தவிர்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

224 உறுப்பினர்கள் மற்றும் ஒரு நியமன உறுப்பினர் உட்பட கர்நாடக சட்டப்பேரவையின் மொத்த பலம் 225 ஆக உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேரும் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 65 ஆக உள்ளது. 37 உறுப்பினர்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 34 ஆக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினரும், நியமன உறுப்பினர் ஒருவரும் இக்கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். 

இதனால், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் மொத்த பலம் 101 ஆக உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 107 உறுப்பினர்களும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவும் உள்ளது. இதனால், பாரதிய ஜனதாவின் பலம் 109 ஆக உள்ளது. 

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளா விட்டால், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 209 ஆக இருக்கும். அப்போது, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், குமாரசாமி அரசு தப்புமா என்பது நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரியவரும். கர்நாடக சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணி அளவில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...