ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா அறிவிப்பு!

செய்திகள்
Updated Jul 08, 2019 | 12:23 IST | Times Now

பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ய தயார் என பரமேஸ்வரா அறிவிப்பு
ராஜினாமா செய்ய தயார் என பரமேஸ்வரா அறிவிப்பு  |  Photo Credit: ANI

பெங்களூரு: கர்நாடகாவில் அரசியல் குழப்பம் காரணமாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு நீடிக்குமா என்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். பிரச்சனையை சமாளிப்பதற்காக, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் குமாரசாமி, சிறப்பு தனி விமானம் மூலம் பெங்களூரு திரும்பியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களில் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.

கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை அனைவரையும் இன்று மதியம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக தற்போதுள்ள அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியல் குழப்பம்: சில முக்கிய தகவல்கள்:

1) கர்நாடக மாநில அமைச்சரும், சுயேட்சை எம்.எல்.ஏவுமான நாகேஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில ஆளுநர் வாஜூபாய் வாலாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2) நாகேஷையும் சேர்த்து  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 13 பேர் இதுவரை ராஜினாமா செய்துள்ள்ளனர்.

3) ரோஷன் பெய்க் என்ற எம்.எல்.ஏ ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக உள்ளார்.

4) கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்- மதச்சார்ப்பற்ற கூட்டணியின் பலம் தற்போது 104 ஆக குறைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பலம் 105 ஆக உள்ளது.

5) 10 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பியுள்ள குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

6) பெங்களூரு சென்று ராஜினாமாமை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோமசேகர் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா அறிவிப்பு! Description: பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola