கர்நாடக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா! தப்புமா குமாரசாமி அரசு!

செய்திகள்
Updated Jul 08, 2019 | 16:44 IST | Times Now

கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 21 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 கர்நாடக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா
கர்நாடக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா  |  Photo Credit: ANI

பெங்களூரு: கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 21 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது அமைச்சர்களின் தன்னிச்சையான முடிவு என  மாநில காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை காப்பாற்றும் முயற்சி இது எனக் கருதப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சர்களைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சித்தராமையா இந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா இன்று காலை, பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கர்நாடக  அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்த சுயேட்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரால் கடத்தப்பட்டதாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னிடம் நாகேஷ் பேசியதாகவும், அவரை மீட்க விமான நிலையத்திற்கு வந்தபோது, விமானம் புறப்பட்டு விட்டதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.

 

 

இதனிடையே, அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பியுள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையால் தனக்கு பதற்றம் ஏதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

 

 

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவி அளித்து கூட்டணி அரசை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் முயற்சித்துவரும் நிலையில், மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் உள்ளதாகவும், ராஜினாமா முடிவில் அவர்கள் உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

NEXT STORY
கர்நாடக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா! தப்புமா குமாரசாமி அரசு! Description: கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 21 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola