கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்: துக்க வீட்டில் அழும் பெண்ணைத் தேற்றும் குரங்கு! - வைரல் வீடியோ

செய்திகள்
Updated Apr 20, 2019 | 18:59 IST | டைம்ஸ் நவ் தமிழ்

துக்க வீட்டில் இறந்தவரை நினைத்துக் கதறி அழும் பெண்ணை ஒரு குரங்கு ஓடிச்சென்று அரவணைத்து அவரின் கண்களைத் துடைக்கும்  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

karnataka monkey console woman
கர்நாடகா குரங்கு வைரல் வீடியோ  |  Photo Credit: YouTube

நமக்குதான் மனிதர்கள் வேறு விலங்குகள் வேறு, மிருகங்களுக்கு எல்லா உயிருமே ஒன்று தான் என்று மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறது இந்த உணர்ச்சிமிக்க வீடியோ. துக்க வீட்டில் இறந்தவரை நினைத்துக் கதறி அழும் பெண்ணை ஒரு குரங்கு ஓடிச்சென்று அரவணைத்து அவரின் கண்களைத் துடைக்கும்  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் நர்குந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துக்க சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த 80 வயது முதியவர் இறந்துவிட, வீட்டுக்குள் பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்து அழுதுகொண்டு இருந்திருக்கின்றனர்.  அப்போது வீட்டுக்குள் வந்த குரங்கொன்று மெதுவாக அவர்களூடே சென்று, அங்கு கதறி அழும் பெண்மணியை கட்டிப்பிடித்து அரவணைக்கிறது. அங்கிருக்கும் ஒருவரும் அந்தக் குரங்கை ஒன்றும் சொல்லவில்லை, பார்த்து பயப்படவுமில்லை. மாறாக அந்தப் பெண்மணி அந்தக்குரங்கிடம் புலம்பத்தொடங்குகிறார், அழுகிறார்.

 

 

உடனே அந்தக்குரங்கு அவரின் கண்ணில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துஆறுதல் சொல்வது போல பாவனை செய்கிறது. இந்த வீடியோக் காண்போடை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. இதுபற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உள்ளூர்காரகள், இந்தக் குரங்கு எங்கு துக்கம் நடைபெற்றாலும் வந்துவிடும் என்றும், நாங்கள் அழுவதையும் ஆறுதல் கூறுவதைப் பார்த்துவிட்டு அதுவும் இதுபோல நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார். தற்போதெல்லாம் இந்தக் குரங்கு இல்லாதே துக்கவீடே இல்லை என்றும் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார். 

NEXT STORY
கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்: துக்க வீட்டில் அழும் பெண்ணைத் தேற்றும் குரங்கு! - வைரல் வீடியோ Description: துக்க வீட்டில் இறந்தவரை நினைத்துக் கதறி அழும் பெண்ணை ஒரு குரங்கு ஓடிச்சென்று அரவணைத்து அவரின் கண்களைத் துடைக்கும்  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Loading...
Loading...
Loading...