கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

செய்திகள்
Updated Jul 21, 2019 | 10:43 IST | Times Now

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு கர்நாடகா வழங்கும் நீரின் அளவை அதிகரித்து உள்ளது

Dam (Representative Image)
Dam (Representative Image)  |  Photo Credit: Getty Images

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகா வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரத்து 300 கன அடியாக இருக்கிறது.

ஜூன் மாதம் 25ஆம் தேதி தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து மாநில விவாதங்களையும் கேட்டறிந்த ஆணையம் மழையையும் நீர் வரத்தையும் பொருத்து ஜூன், ஜூலை மாதம் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் ஜூன் மாதத்துக்கான தண்ணீரை ஜூலை 10 தேதி வரைகூட திறக்க மறுத்துவந்தது கர்நாடகா.

அதன்பிறகு கர்நாடகாவில் மழை அதிகமாக பெய்ய தொடங்கியது. இதனால் அங்கிருக்கும் கிருஷ்ணசாகர் அணை முதற்கொண்டு அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பத் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் காவிரி மேலாண்மை 40 டிஎம்சி அளவு தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கூறிய அளவைவிட  குறைவாகவே ஜூலை 18ம் தேதி அன்று முதல் கர்நாடகா நீரைத் திறந்துவிட்டது.

ஆனால் அதன்பிறகு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தற்போது தமிழகத்துக்கு கொடுக்கும் நீரின் அளவு கனிசமாக உயர்ந்துவருகிறது. கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 5199 கன அடியாகவும் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4800 கன அடியாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் நீர் ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் வரத் தொடங்கிவிட்டன 

124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணசாகர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை நீர்மட்டம் 70 அடி ஆக இருக்கிறது .இதனால் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்கும் நீரின் அளவை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கே மழை நீடிக்கும் என்பதால் இந்த நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...