நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள்: கர்நாடக சபாநாயருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

செய்திகள்
Updated Jul 18, 2019 | 17:31 IST | Times Now

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக சபாநாயருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா அறிவுறுத்தியுள்ளார்.

நம்பிக்கை  வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள்: கர்நாடக ஆளுநர்
நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள்: கர்நாடக ஆளுநர்  |  Photo Credit: ANI

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, நம்பிக்கை  வாக்கெடுப்பை இன்றே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக சபாநாயருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை
தொடங்கி வைத்தார். அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் சுய விருப்பதின் பெயரிலேயே ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் தெரிவித்த நிலையில், ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறினார். ஆட்சியை கலைக்கும் முயற்சியின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த சபாநாயர் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் உரிமை தனக்கே உள்ளதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றிரவு மும்பை சென்றடைந்ந கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஸ்ரீமந்த் பாட்டீல் நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

congress mla in hospital

தங்களது எம்.எல்.ஏ. பாரதிய ஜனதா கட்சியினரால் கடத்தப்பட்டுள்ளதாகக்கூறி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, நாட்டு மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும் தவறான தகவல்களை அளித்து வருவதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். தங்களது எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அரசியல் அமைப்பு சட்டம் அதிகாரம் அளித்துள்ளது எனத் தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமைய்யா, உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாகத் தெரிவித்தார்.


இதனையடுத்து ஏற்பட்ட அமளி காரணமாக சட்டப்பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்தனர். 


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...