கர்நாடக சட்டப்பேரவையில் இரவு முழுவதும் பாஜக எம்.எல்.ஏக்கள் போராட்டம்!

செய்திகள்
Updated Jul 19, 2019 | 08:39 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்றிரவு முழுவதும் எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை வளாகத்திற்குள் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் இரவு முழுவதும் தொடர்ந்த போராட்டம்
கர்நாடக சட்டப்பேரவையில் இரவு முழுவதும் தொடர்ந்த போராட்டம்  |  Photo Credit: ANI

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேற்றிரவு முழுவதும் எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை வளாகத்திற்குள் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஆன பின்னரும் வெளியேறியாத அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரையில் அவையில் இருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரான எடியூரப்பா படுக்கையை எடுத்துவந்த சட்டப்பேரவையிலேயே இரவு முழுவதும் படுத்து உறங்கினார்.

இதேபோல், பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று காலை எம்.எல்.ஏக்கள் பலர் சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்கிங் செய்தனர்.

பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்திலேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கர்நாடக சட்டப்பேரவை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...