தமிழகத்துக்கு காவிரி நீரைத் தர குமாரசாமி முடிவு

செய்திகள்
Updated Jul 09, 2019 | 21:47 IST | Times Now

ஜூன் மாதத்துக்கான தண்ணீரை இப்போதுவரை வழங்க மறுத்துவந்தது கர்நாடகா, அங்கே மழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடிவு செய்துள்ளது.

kumaraswamy
kumaraswamy  |  Photo Credit: Twitter

கர்நாடக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் பொருட்டு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழகத்தில் மழை பொய்த்து இந்த வருடம் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் பொதுமக்களும் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஜூன் மாதம் 25ஆம் தேதி தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து மாநில விவாதங்களையும் கேட்டறிந்த ஆணையம் மழையையும் நீர் வரத்தையும் பொருத்து ஜூன், ஜூலை மாதம் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் ஜூன் மாதத்துக்கான தண்ணீரை இப்போதுவரை வழங்க மறுத்துவந்தது கர்நாடகா.

தற்போது கர்நாடகாவில் பெருமழை பெய்து அணைகளில் நீர்வரத்து பெறுகிவருகிறது. இதனால் முதலமைச்சர் குமாரசாமி, தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க முடிவு செய்து காவிரி நீர் மேலாண்மைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த குமாரசாமி, மாண்டியா விவசாயிகளின் நலனுக்காக தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட முடிவு செய்துள்ளோம். தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைத்தால் தண்ணீர் பிரச்னை ஓரளவுக்காவது சரியாகும் என்று நம்புவோம். 

NEXT STORY
தமிழகத்துக்கு காவிரி நீரைத் தர குமாரசாமி முடிவு Description: ஜூன் மாதத்துக்கான தண்ணீரை இப்போதுவரை வழங்க மறுத்துவந்தது கர்நாடகா, அங்கே மழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடிவு செய்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola