கர்நாடகாவில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு

செய்திகள்
Updated Aug 20, 2019 | 13:35 IST | Times Now

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று சுமார் 25 நாட்களுக்குப் பிறகு இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

B S Yediyurappa added 17 ministers to his cabinet
B S Yediyurappa added 17 ministers to his cabinet  |  Photo Credit: ANI

கடந்த மாதம் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உடைந்து சென்ற மாதம் 26ஆம் தேதி முதலைமச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்ததால் அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா முதலைமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும் நடுவே ஏற்பட்ட காஷ்மீர் ஆர்டிகள் 370  நீக்கம், கர்நாடகா வெள்ளம் ஆகிய பிரச்னைகளால் இத்தனை நாட்களாக அமைச்சரவையின் விரிவாக்கம் நடைபெறாமலேயே இருந்தது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்தபின் இன்று முதற்கட்டமாக 17 எம்.எல்.ஏக்கள் பதிவியேற்றுக் கொண்டனர். இன்று காலை பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இவர்களுக்கு கர்நாடகாவின் கவர்னர் வஜூபாய் வாலா பதிவிப் பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்றுக் கொண்ட 17 அமைச்சர்கள்: ஜெகதீஷ் ஷட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், கோவித காரஜோல், அஸ்வத் நாராயணன், கே.எஸ்.ஈஸ்வரப்பா, அசோகா, லக்‌ஷ்மன் சங்கப்ப சவாடி, சி.டி.ராவி, மது சுவாமி, கோடா சீனிவாச பூஜாரி, பசவராஜ் பொம்மை, நாகேஷ், பிரபு சவுஹான், ஜோல் ஷஷிகலா, சந்திரகண்டாகவுடா பாடில் 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...