தொடரும் இழுபறி: கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

செய்திகள்
Updated Jul 20, 2019 | 09:17 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Karnataka Assembly, கர்நாடக சட்டப்பேரவை
கர்நாடக சட்டப்பேரவை  |  Photo Credit: ANI

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் தொடர்வதால் சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, இன்று மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வியாழக்கிழமை குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இன்று மதியம் 1.30 மணியை தாண்டியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் மீண்டும் கெடு விதித்தார். இதனால் அவையில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. 

இதற்கிடையில் நம்பிக்கை கோரும் விவாதத்தின் போது பேசிய முதல்வர் குமாரசாமி, மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்து என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது. ஆளுநர் அனுப்பிய கடிதம் தன்னை காயப்படுத்திவிட்டதாக குமாரசாமி குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் எனவும்,  கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குதிரை பேரம் இப்போதுதான் ஆளுநருக்கு தெரிகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து எம்எல்ஏக்கள் தொடர்ந்து தீர்மானத்தின் மீது பேசி வந்த நிலையில், திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த சபாநாயகரிடம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார். 
 

NEXT STORY
தொடரும் இழுபறி: கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு Description: கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles