சந்திரயான்-2 : முதல் போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ!

செய்திகள்
Updated Jun 12, 2019 | 12:06 IST | Times Now

இஸ்ரோவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 திட்டத்தை ஜூலை மாதம் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

சந்திரயான்-2 : முதல் போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ
சந்திரயான்-2 : முதல் போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ  |  Photo Credit: Twitter

இஸ்ரோவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 திட்டத்தை ஜூலை மாதம் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், சந்திரயானை விண்ணுக்கு சுமந்து செல்லும் ராக்கெட்டின் முதல் போட்டோவை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. 

சந்திரயான்-2 அமைப்பை உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 விண்ணிற்கு சுமந்து சென்று செயல்படுத்த உள்ளது. இதில் மூன்று வகையிலான அமைப்புகள் உள்ளன. இந்த ராக்கெட்டில் முதல் அமைப்பு சந்திரயான்-2 ஐ சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும், அடுத்தக்கட்டமாக லேண்டர் எனப்படும் அமைப்பு நிலவில் சந்தியான்-2 தரையிறக்கும். 3வது ரோவர் எனப்படும் ஆய்வுக் கலமான பிரக்யான்.

இஸ்ரோ தகவலின்படி ஆர்பிட்டர் அமைப்பு முதலில் சந்திரயான்-2 சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் என்றும், பின்னர் அங்கிருந்து நிலவின் தெற்கு எல்லைப் பகுதியில் தரையிறக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. பின்னர் ஆறு சக்கரங்களைக் கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

NEXT STORY
சந்திரயான்-2 : முதல் போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ! Description: இஸ்ரோவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-2 திட்டத்தை ஜூலை மாதம் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles