விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் - 2பி செயற்கைக்கோள்!

செய்திகள்
Updated May 22, 2019 | 09:03 IST | Times Now

இன்று காலை ரிசாட் - 2பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி - சி46 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

ISRO successfully launches RISAT-2B
ISRO successfully launches RISAT-2B   |  Photo Credit: Twitter

2009-ஆம் ஆண்டு ரிசாட் - 1 மற்றும் ரிசாட் - 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது ரிசாட் - 2பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோள், வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியில் நிலப்பரப்பை துள்ளியமாக படம் எடுத்துக்காட்டும். ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதி நவீன புகைப்படக் கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

இது நாட்டுக்கு மிகமுக்கியாமான ஒரு செயற்கைக்கோள் என இஸ்ரோவின் தலைவர் சிவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரவு, பகல் எந்நேரமும் துள்ளியமாகப் படம் எடுக்கமுடியும் என்பதால் ராணுவ விஷயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளுடன் சேர்த்து இந்த ஆண்டு மூன்று செயற்கிக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி கலாம்சாட் - வி2, ஏப்ரல் ஒன்று அன்று எமிசார் ஏவப்பட்டது. இன்று காலை 5.30 மணிக்கு ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் ரிசாட்-2பி ஏவப்பட்டது. 
 

NEXT STORY
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் - 2பி செயற்கைக்கோள்! Description: இன்று காலை ரிசாட் - 2பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி - சி46 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
Loading...
Loading...
Loading...