ஜூலை 15-ல் விண்ணில் சீறிப் பாயத் தயாராகும் சந்திராயன் 2 - போட்டோஸ்

செய்திகள்
Updated Jul 11, 2019 | 16:38 IST | Times Now

ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டுகிறது.   

Chandrayaan-2
சந்திராயன் 2  |  Photo Credit: Twitter

இஸ்ரோ நிறுவனம் தனது அடுத்த அத்தியாயமான சந்திராயன் 2-வின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன் 1-யை தொடர்ந்து தற்போது  ஜூலை 15-ஆம் தேதி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தியா சார்பில் முதல் முறையாக  நிலவைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் தொடர்ச்சியான சந்திராயன் 2 விண்வெளிக்கு அனுப்பட உள்ளது.

சந்திரயான் – 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் , ரோவர் ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லேண்டர் 'விக்ரம்' என்றும்,  ரோவர் 'பிரக்யான்' என்றும் அழைக்கப்படுகிறது. 'விக்ரம்' என்ற பெயர் முன்னாள் இஸ்ரோ தலைவரான விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம்  ஜூலை 15-ஆம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட உள்ள சந்திரயான்-2. ஆர்பிட்டர் ப்ரொபல்ஷன்  மூலம் நிலவுக்கு சென்ற பிறகு நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து தரை இறங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை கண்டறியும்.

Chandrayaan-2

அதன் பிறகு ஆர்பிட்டரை விட்டு  லேண்டர் பாகம் தனியாக பிரிந்து செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கும். அதன் பிறகு ரோவர் 'பிரக்யான்' 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும். ஆர்பிட்டர் ஆனது  நிலவில் ஓர் ஆண்டுவரை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.  

Chandrayaan-2 

தொடர்ந்து நிலவு பற்றியும் சந்திரயான்-2 பற்றியும்  இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது இஸ்ரோ. முதல் முறையாக சந்திராயன் 2 தன் லான்ச் பாடில் இருக்கும் புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

Chandrayaan-2

கிட்டத்தட்ட ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சந்திராயன் 2 இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டுகிறது.   
 

NEXT STORY
ஜூலை 15-ல் விண்ணில் சீறிப் பாயத் தயாராகும் சந்திராயன் 2 - போட்டோஸ் Description: ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டுகிறது.   
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola