விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ அறிவிப்பு

செய்திகள்
Updated Sep 10, 2019 | 12:31 IST | Times Now

விக்ரம் லேண்டரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ, ISRO not able to communicate with Vikram Lander
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை:இஸ்ரோ  |  Photo Credit: Twitter

விக்ரம் லேண்டரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதனை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 

நிலவை பற்றி ஆராய இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன்-2 திட்டமிட்டபடி செயல்பட்டு கொண்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் தரையிறங்கும் போது நிலவில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது. திட்டமிட்ட இடத்தை விட 500 மீட்டர் தள்ளி லேண்டர் விக்ரம் உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இஸ்ரோ சந்திராயன்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதனை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து லேண்டர் விக்ரமை தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

 

 

இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் சிலர் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்திருந்தனர். லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் வாழ்நாள் ஒரு நிலவு தினம், அதாவது பூமியில் 14 நாட்களுக்கு சமம். எனவே விரைவில் அதனுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் மூலம் தரைஇறங்காததால் நிலை சீராக இருப்பது சற்று கடினம். மேலும் ஆர்பிட்டர் அல்லது பூமியில் உள்ள மையத்தை நோக்கி ஆண்டனாக்கள் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு லேண்டரை தொடர்பு கொள்ள பல தடைகள் உள்ள நிலையில் இஸ்ரோ தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...