தயாரானது சந்திராயன் - 2: ஜூலை 22-ல் ரீ-லான்ச்!

செய்திகள்
Updated Jul 18, 2019 | 11:37 IST | Times Now

சந்திரயான்-2 தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஏவப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் வரும் 22ஆம் தேது மீண்டும் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

chandrayaan- 2
chandrayaan- 2  |  Photo Credit: Twitter

கடந்த திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படவிருந்த சந்திராயன் - 2 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் வரும் ஜூலை  22 தேதியில் மீண்டும் விண்ணில் ஏவப்பட இருப்பதான் இஸ்ரோ அறிவித்துள்ளது.

உலக நாடுகள் போகாத நிலவின் தென் துருவத்துக்கு இந்த விண்கலத்தை அனுப்ப இருந்தது இஸ்ரோ. இதனால் இந்தியாவுக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கும் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். சுமார் 978 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த சந்திராயன் - 2 விண்கலம் தனது கவுண்ட் டவுனை ஜூலை 14ஆம் தேதி காலை தொடங்கியது. சரியாக 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த சந்திராயன் - 2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஏவப்படும் எனக் கூறியிருந்தது இஸ்ரோ. அதன்படி வரும் ஜூலை  22 தேதியில் மீண்டும் சந்திராயன் - 2 இயக்கப்படும் என்று தற்போது இஸ்ரோ தனது அதிராகப் பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

 

அதன்படி வரும் திங்கட்கிழமை மதியம் 2:43 மணிக்கு ஏவப்படவுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன் 1-யை தொடர்ந்து தற்போது  சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட இருந்தது. நிலவில் தரையிறங்கிய சந்திராயன் - 1 நிலவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட இருந்த  சந்திரயான்-2 சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் நிலையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. 

NEXT STORY
தயாரானது சந்திராயன் - 2: ஜூலை 22-ல் ரீ-லான்ச்! Description: சந்திரயான்-2 தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஏவப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் வரும் 22ஆம் தேது மீண்டும் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles