ப.சிதம்பரத்துக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு

செய்திகள்
Updated Aug 22, 2019 | 19:26 IST

ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Congress leader P Chidambaram
Congress leader P Chidambaram  |  Photo Credit: PTI

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தரப்பு தெரிவித்தது. வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ அதிகாரிகள் கேட்கிறார்கள், நேற்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே சிதம்பரம் பதிலளித்தவை. அவர்களிடம் கேட்பதற்கு கேள்விகளே இல்லை என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் சிபிஐ அனுமதி கேட்டபடி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், தினமும் அரை மணிநேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் விசாரணை முடிந்த பின்பு திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 

NEXT STORY
ப.சிதம்பரத்துக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு Description: ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles