இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 12,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

செய்திகள்
Updated Nov 06, 2019 | 14:31 IST | Times Now

கான்கிசண்ட் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஃபோசிஸ், கேப்ஜெமினி ஆகிய ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளனர்.

Infosys, இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்  |  Photo Credit: BCCL

சென்னை: நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செலவுகளை குறைக்கும் விதமாக ஐடி நிறுவனங்களில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது.

முன்னதாக காக்னிசண்ட் நிறுவனம் ஏழாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் இதே பாணியை பின்பற்றுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர் பதவிகளில் உள்ள சுமார் 2,200 பேரும், மத்திய நிலைப் பதவிகளில் உள்ள சுமார் 4000-10000 பேரும் தங்களது வேலையை இழக்க உள்ளனர். மேலும், தலைமை அதிகாரிகள் 50 பேர் வரையில் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கேப்ஜெமினி எனும் மற்றொரு ஐடி நிறுவனமும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஐடி நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே நிகழும் இந்த தொடர் பணி நீக்கத்தால் அத்துறையில் பணிபுரிவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

NEXT STORY