வீர் சக்ரா பரிந்துரை செய்த விமானப்படை, அபிநந்தனை இடமாற்றமும் செய்தது!

செய்திகள்
Updated Apr 20, 2019 | 21:53 IST | ANI

அவர் மீண்டும் எப்போது பணிக்குத் திரும்புவார் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் விமானப்படை அவரை இடமாற்றம் செய்துள்ளது.

அபிநந்தன்
அபிநந்தன்  |  Photo Credit: ANI

புல்வாமா தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தியபோது விமானம் செயலிழந்து விமாரப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் பிடிபட்ட வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தான், பிறகு நல்லெண்ண அடைப்படையில் அவரை விடுதலையும் செய்தது. 

நாடே அவருக்காக பிரார்த்தனை செய்து, உலக அளவில் இந்தியர்களிடம் ட்ரெண்ட் ஆனார் அபிநந்தன். பிடிபட்டபின் பாகிஸ்தான் உள்ளூர்காரர்களிடம் அடிவாங்கியபோதும் தைரியாமாக அவர் பேசும் வீடியோ அப்போது ட்ரெண்டிங் ஆனது. அவர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தபின் அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் பலதரப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் சிப் வைத்து அனுப்பியிருக்கிறதா என்றெல்லாம் அப்போது விசாரித்தனர். மருத்துவமனையில் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் அவரை சந்தித்தனர்.

அவர் மீண்டும் எப்போது பணிக்குத் திரும்புவார் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் விமானப்படை அவரை இடமாற்றம் செய்துள்ளது. அவரி ஸ்ரீநகரில் இருந்து மேற்குப்பகுதி விமானப்படை தளத்துக்கு அபிநந்தன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் அபிநந்தனுக்கு போர் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வழங்கப்படும் விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்க விமானப்படை பரிந்துரை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
வீர் சக்ரா பரிந்துரை செய்த விமானப்படை, அபிநந்தனை இடமாற்றமும் செய்தது! Description: அவர் மீண்டும் எப்போது பணிக்குத் திரும்புவார் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் விமானப்படை அவரை இடமாற்றம் செய்துள்ளது.
Loading...
Loading...
Loading...