8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா!

செய்திகள்
Updated Jun 18, 2019 | 14:12 IST | Times Now

மக்கள் தொகை அதிகரிப்பு வகித கணக்கின்படி, இன்னும் 8 ஆண்டுகளில் மக்கள் தொகையில், சீனாவை முந்தி முதலிடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா
8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா  |  Photo Credit: Shutterstock

புதுடெல்லி: மக்கள் தொகை தொடர்பாக ஐ.நா. ஆய்வறிக்கையில் 2019 முதல் 2050 ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு வகித கணக்கின்படி, இன்னும் 8 ஆண்டுகளில் மக்கள் தொகையில், சீனாவை முந்தி முதலிடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவின் இந்த அறிக்கையின்படி இந்தியாவில் மட்டுமின்றி ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும் 2050 ஆண்டுக்குள் மக்கள் தொகை மேலும் 20 கோடி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் மக்கள் தொகை  மட்டும் சேர்த்து 2050 ஆண்டில் உலக மக்கள் தொகையில் 23 சதவிகிதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனாவின் மக்கள் தொகை 2.2 சதவிகிதம் அதாவது 3 கோடி வரை குறையும் என்றும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், உலக மக்கள் தொகை அதிகரிப்பில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ மக்கள் குடியரசு, தான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய 9 நாடுகளில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி பார்த்தால், 2050 ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 110 கோடியாகாவும், நைஜீரியாவின் மக்கள் தொகை 73.3 கோடியாகவும், அமெரிக்க மக்கள் தொகை 43.4 கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி எதிர்பார்த்த வகையில் அமையும் எனத் தெரிவித்துள்ள இந்த ஆய்வறிக்கை, மக்களில் அதிகளவு இளைஞர்களாவும் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், 55 நாடுகளில் மக்கள் தொகை ஒரு சதவிகிதம் வரை குறையும் என்றும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NEXT STORY
8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா! Description: மக்கள் தொகை அதிகரிப்பு வகித கணக்கின்படி, இன்னும் 8 ஆண்டுகளில் மக்கள் தொகையில், சீனாவை முந்தி முதலிடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles