தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும்- இந்திய வானிலை மையம் தகவல்!

செய்திகள்
Updated May 15, 2019 | 13:21 IST | Times Now

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன்6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும்: வானிலை மையம்
பருவமழை ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும்: வானிலை மையம்  |  Photo Credit: BCCL

புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி வழக்கமாக தொடங்க வேண்டும். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 5 நாட்கள் காலதாமதமாக தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, 4 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மழைப் பொழிவை அளிக்கும். தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடற்பகுதி, நிகோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த மாதம் 18 அல்லது 19 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என்றும், இதில் ஒரிரு நாட்கள் மாறுதல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தது.
 

NEXT STORY
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும்- இந்திய வானிலை மையம் தகவல்! Description: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன்6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles