குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை!

செய்திகள்
Updated Jul 17, 2019 | 18:37 IST | Times Now

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை
குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை!  |  Photo Credit: Times Now

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குல்பூஷன் ஜாதவ் வழக்கை தீர்ப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் யாதவுக்கு, உளவு பார்த்தது தொடர்பாக மரண தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவுப்பு இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது, குல்பூஷன் யாதவை கைது செய்தது தொடர்பாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்படவில்லை என இந்தியா தெரிவித்தது. இதேபோல், குல்பூஷன் யாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளைச் செய்ய மறுத்ததன்மூலம் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 10 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரையில் குல்பூஷன் யாதவுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

குல்பூஷன் யாதவ் ஈரானில் இருந்து வந்தபோது பாகிஸ்தானின் பலூஜிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்ததாக பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதேசமயம், குல்பூஷன் யாதவ் ஈரானுக்கு தொழில் ரீதியாக சென்றபோது, அங்கிருந்து கடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...