மேற்கு வங்க முதல்வராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி அறிவிப்பு

செய்திகள்
Updated May 25, 2019 | 20:28 IST | Times Now

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் மட்டும் நீடிக்க விரும்புகிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

West Bengal CM Mamata Banerjee
West Bengal CM Mamata Banerjee  |  Photo Credit: ANI

கொல்கத்தா: முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடும் வன்முறைகளுக்கு இடையே மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிளை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. 

திரிணாமுல் காங்கிரஸ் கடந்த முறை 34 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றி இருந்தது. இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. போட்டியிட்ட 42 தொகுதிகளில் 22 இடங்கள் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அவசரக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தல் ஆணையம் முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சிக்காக வேலை செய்துள்ளது. மத்திய படைகள் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயல்பட்டது. மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. மதத்தால் பிரித்தாலும் சூழ்ச்சியால் பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளனர். நான் ஒருபோதும் மதவாதத்திற்கு துணை போக மாட்டோன். வாக்குகளுக்காக இந்து, முஸ்லீம் இடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அவர்கள் பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு முதல்வராக தொடர விருப்பமில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் மட்டும் நீடிக்க விரும்புகிறேன் என்றார். 

NEXT STORY
மேற்கு வங்க முதல்வராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி அறிவிப்பு Description: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் மட்டும் நீடிக்க விரும்புகிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles