ஹைதராபாத்தில் இரண்டு ரயில்கள் நேரு நேர் மோதியதில் 12 பேர் படுகாயம்

செய்திகள்
Updated Nov 11, 2019 | 15:44 IST | Times Now

தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத் ரயில்கள் விபத்து
ஹைதராபாத் ரயில்கள் விபத்து  |  Photo Credit: ANI

ஹைதராபாத்தில் இன்று காலை கொங்கு எக்ஸ்பிரஸும் புறநகர் மின்சார ரயிலும் நேருக்குநேர் மோதியல் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கோவையில் இருந்து டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்பார்க்காத விதமாக புறநகர் மின்சார ரயில், நின்று கொண்டிருந்த கொங்கு எக்ஸ்பிரஸ் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் ரயிலின் உள்ளே மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை மீட்கும் பணி துரிதமாக நடைற்று வருவதாகதும் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரயில் நிலையம் என்பதால் குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்து காரணமாக பல ரயில்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

NEXT STORY