அமெரிக்காவில் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்தியர்கள் முன் உரையாற்றிய மோடி!

செய்திகள்
Updated Sep 23, 2019 | 08:56 IST | Times Now

சுமார் 50 ஆயிரம் பேர் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார்.

HowdyModi event
HowdyModi event  |  Photo Credit: Twitter

அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தின ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி அரங்கில் நடைபெற்றது. சுமார் 50 ஆயிரம் பேர் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார்.

இரு நாட்டு தேசிய கீதம் இசைத்தபின் பேசத்தொடங்கிய பிரதமர், ‘’ முதன்முதலில் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்த போது இந்தியாதான் உண்மையான நண்பன் என்று கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் ட்ரம்ப் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளார். தற்போது இரு நாட்டு மக்களின் நட்புறவு உச்சத்தில் உள்ளது. அதனை நம்மால் உணரமுடிகிறது. நீங்க எனக்கு உங்களது குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தீர்கள். நான் இன்று எனது இந்திய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றவர் கூட்டத்தைப் பார்த்து அடுத்த வருடம் அமெரிக்க தேர்தல் நடைபெறுகிறது. அதில் மீண்டும் ட்ரம்ப்பே வேட்பாளாராக போட்டியிடுகிறார். அவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுங்கள் என்று கூறினார்.

 

 

மேலும் பாகிஸ்தானைப் பற்றிக் கூறிய மோடி, அமெரிக்காவில் நடைபெற்ற  ட்வின் டவர் 9/11 தாக்குதல், மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதல் நடத்தியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க ட்ரம்ப்புக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, என்னை எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டீர்கள் சப் சங்கா ஸி, அந்தா பாக உந்தி, எல்லா சென்னா கீரெ. எல்லாம் சௌக்கியம் என்று அனைத்து மொழிகளிலும் கூறி இந்தியாவில் அனைவரும் நலமாக இருக்கிறோம் என்றா. முன்னதாக மோடி உள்ளே நுழையும்போது 50 ஆயிரம் பேரும் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். 

NEXT STORY