பேர் கிரில்ஸ் ஹிந்தியை இப்படிதான் புரிந்துகொண்டார் - மான் கி பாத்தில் பிரதமர் மோடி

செய்திகள்
Updated Aug 25, 2019 | 16:28 IST | Times Now

’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் தான் பேசிய ஹிந்தியை தொகுப்பாளர் பேர் கிரில்ஸ் எப்படி புரிந்துகொண்டார் என்று எழுந்துள்ள கேள்விக்கு பிரதமர் மோடி புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Prime Minister Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி, bear grylls
பிரதமர் நரேந்திர மோடி, பியர் கிரில்ஸ்  |  Photo Credit: ANI

புது டெல்லி: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியாகும் முதல் ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் மூன்றாவது ’மன் கீ பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சி இதுவாகும்.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்ப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றது மற்றும் ’ஃபிட் இந்தியா இயக்கம்’ குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய குறிப்புகள்:

  • தேசிய விளையாட்டு தினமான 29 ஆகஸ்டு 2019 அன்று உடல் நலன் பேணுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ தொடங்கப்படும்.
  • ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் நான் பேசிய ஹிந்தியை தொகுப்பாளர் பேர் கிரில்ஸ் எப்படி புரிந்துகொண்டார் என்று பலர் கேள்வி எழுப்பினர். தொழிற்நுட்பம் அதனை சாத்தியப்படுத்தியது. காதில் பொருத்தப்பட்ட மொழிப்பெயர்ப்புக் கருவியைக் கொண்டு நான் பேசியதை அவர் உடனுக்குடன் ஆங்கிலத்தில் அறிந்துகொண்டார்.
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், திறந்தவெளிக் கழிப்பகம் இல்லா இந்தியாவை காந்தி மகானுக்கு சமர்ப்பிப்பதோடு, நெகிழி தவிர்ப்பு இயக்கமும் துவங்கப்படும். இந்தியத் தாயை நெகிழியிடமிருந்து காப்பாற்றும் விதமாக இந்தாண்டு காந்தி ஜெயந்தியை கொண்டாடுமாறு மக்களிடம் வேண்டுகிறேன்.
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை உலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. இம்மாபெரும் விழாவிற்காக இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. சேவை மனப்பான்மை என்பது மகாத்மா காந்தியின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும்.
  • ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்விலிருந்து இன்றைய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணலாம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்தபோதிலும் அவரது போதனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்துகின்றன.
  • ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...